Monday, July 28, 2008

துருக்கி: இஸ்தான்புலில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி

இஸ்தான்புலில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி
இஸ்தான்புல் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஜூலை 2008 ( 12:18 IST )

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாயினர்; 140 பேர் காயமடைந்தனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள குங்கோரன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் வணிகவளாகம் என்பதால், அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.

குப்பைத் தொட்டி ஒன்றில் மறைத்து வைத்து இந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

1 comment:

  1. இந்த குண்டுவெடிப்பை செய்தது இந்து பயங்கரவாதிகள் என்று ஏகலைவன், அசுரன், தியாகு, ஜமாலன், ஜ்வோம்ராம் சுந்தர், ரோசாவசந்த், சுகுணாதிவாகர், வளர்மதி ஆகியோர் கூறுவர்.

    ஆகவே அறிவுஜீவியாக முயற்சி செய்யுங்கள்.

    தெரிகிறதா?

    ReplyDelete