Sunday, March 23, 2008

இந்த பிஷப் ஆனந்தராஜ் என்ன ஆனார் என்பது யாருக்காவது தெரியுமா?

இந்த பிஷப் ஆனந்தராஜ் என்ன ஆனார் என்பது யாருக்காவது தெரியுமா?

--

பிஷப் ஆனந்தராஜ் கைது: வீடு கட்டித் தருவதாக ரூ. 7 கோடி மோசடி!
சனிக்கிழமை, ஆகஸ்ட் 5, 2006

சென்னை:

வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடுகள் கட்டித் தருவதாக கூறி தமிழகம், கேரளம்,ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கட்டட காண்டிராக்டர்களை ஏமாற்றி ரூ. 7கோடி அளவுக்கு பணத்தை மோசடி செய்த பிஷப் ஆனந்தராஜ் என்பவரை போலீஸார்அதிரடியாக மடக்கிக் கைது செய்தனர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் மகாபலிபுரத்திற்கு முன்பாக உள்ளது பேரூர்.இந்தக் கடலோர கிராமத்தில், மோலின் மிஷன் என்ற பெயரில் சர்ச் ஒன்றை நடத்திவருபவர் பிஷப் ஆனந்தராஜ். மிகப் பெரிய மோசடிப் பேர்வழியான ஆனந்தராஜின்தொழில் ரகசியம் படு கில்லாடித்தனமானது.

ஏதாவது ஒரு குக்கிராமத்தை ஆனந்தராஜ் குறிவைப்பார். அந்தக் கிராமத்திற்கு தனதுசர்ச்சைச் சேர்ந்த ஒரு குழுவை அனுப்பி, இந்தக் கிராமத்தில் உள்ள ஏழை, எளியமக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரவுள்ளோம், இதற்காக வெளிநாட்டிலிருந்துநிதியுதவி கிடைத்துள்ளதாக அங்குள்ள கிராமப் பெரியவர்களிடம் தெரிவிப்பார்.

இதைக் கேட்டு ஆச்சரியப்படும் கிராமப் பெரியவர்கள், இதற்கான அனைத்துஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளிப்பார்கள். பின்னர் அடுத்த வலையைவிரிப்பார் ஆனந்தராஜ். அதாவது காண்டிராக்டர்களுக்கு இந்த வலை. சில கோடிதிட்டம் இது, செய்து தந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டுவார்.

அதை நம்பி வாயைப் பிளக்கும் காண்டிராக்டர்களிடம் முதலில் ஒரு கணிசமானதொகையை (குறைந்தது ரூ. 5 லட்சம் என்கிறார்கள்) வாங்கிக்கொள்வார். அடுத்துஇன்னும் சில நாட்களில் 1 கோடிக்கான செக் உங்களது கையில் இருக்கும் என்று கூறிஅவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவாராம் ஆனந்தராஜ்.

முடிந்தால் அந்த காண்டிராக்டரிடமிருந்து மேலும் பணத்தையும் பறித்துக்கொள்வாராம். ஆனால் கடைசி வரை வீடு கட்டும் காண்டிராக்ட் எந்தகாண்டிராக்டருக்குமே கிடைககாது. காரணம், அப்படிஒரு திட்டமே கிடையாது,வெறும் டுபாக்கூர் என்பதுதான் இந்த மோசடியின் கிளைமாக்ஸ்.

இப்படியாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றி பலகோடி பணத்தை ஆனந்தராஜ் பறித்துள்ளார். தமிழகம் தவிரகேரளா,ஆந்திரா ஆகியமாநிலங்களிலும் இவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அருகே இவரதுஅலுவலகம் இருந்தாலும் ஆனந்தராஜ் பெரும்பாலும் பெங்களூரில் தான் தங்குவார்.

பணத்தைப் பறிகொடுத்து ஏமாந்து,அதை திருப்பிக் கேட்டு அனத்தும்காண்டிராக்டர்களை பெங்களூருக்கு வரவழைதது அங்கு ஆள் வைத்து அடித்துவிரட்டிவிடுவாராம்.

இவரைப் பற்றி தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள்கூறபப்ட்டுள்ளன. ஆனாலும் ஆனந்தராஜை போலீஸார் பிடிக்க முடியவில்லைஅல்லது முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த சிவககுமார் என்ற காண்டிராக்டர்ஆனந்தராஜிடம் ரூ. 10லட்சம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தார். ஆனால்ஆனந்தராஜை எப்படியாவது போலீஸில் மாட்ட வைக்க வேண்டும் என்று உறுதிபூண்ட சிவக்குமார், தன்னைப் போல ஏமாந்த சில காண்டிராக்டர்களை சேர்த்துக்கொண்டு ஆனந்தராஜ் மற்றம் அவரது கூட்டத்தைக் கண்காணித்து வந்தார்.

வியாழக்கிழமை இரவு ஆனந்தராஜ் பெங்களூரிலிருந்து சென்னைக்குவந்துள்ளதாகவும், பேரூர் நோக்கி அவர் கிழக்குக்கடற்கரைச்சாலையில்போய்க்கொண்டிருப்பாகவும் சிவக்குமாருக்குத் தகவல் கிடைத்த்து. இதையடுததுஅவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

காத்திருந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை மறித்துஆனந்தராஜை கைது செய்தனர். உடனடியாக அவரை கல்பாக்கம் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கடடவிசாரணையில் ஆனந்தராஜ் ரூ.7கோடி அளவுக்கு மோசடி செய்துளளது தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தை வைத்து மனைவி, மகள்கள், மருமகன்கள் ஆகியோரதுபெயர்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலும, கர்நாடகத்திலும் ஏராளமானசொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாராம் ஆனந்தராஜ். இதுதவிரபணமழையில்மிதந்த ஆனந்தராஜ், சிலதுணை நடிகைகளுடனும் அடிக்கடி நட்சத்திரஹோட்டல்கள், கிழக்குக் கடற்கரைச்சாலை விடுதிகளில் தங்கி கும்மாளம்போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனந்தராஜுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி டெய்சி, மகள்கள் சாரா,ரூத், ஜாய்,மருமகன் சேவியர், அவரது உதவியாளர்சுரேஷ், பழனி, செந்தில்,இசபெல்லா, ராகுல், பத்மா, உஷா, ஆனந்தராமுலு உளளிட்டோர் மீதும் பாலீஸார்வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அத்தனைபேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.

No comments: