Monday, March 31, 2008

இஸ்ரேல் பாரமான கல் - முழுக்கதை

பொதுவாகவே கிறிஸ்துவர்கள் கன்னாபின்னா என்று பொய் சொல்லக்கூடியவர்கள். அதுவும் பைபிளை கையில் எடுத்து உயர்த்தி உளறுவதற்கு அளவே கிடையாது. அவர்கள் கூறும் பொய்கள் எல்லாம் பைபிளை சுத்தமாக படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றும் உருவி ஓ என்று கத்துவதுதான்.

ஒரு பக்கம் உங்களது யாஹ்வே தெய்வம் கல்லாலடித்து கொல்லச்சொல்லியிருக்கிறதே. செய்யவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் கிடையாது இப்போது. எங்கள் தெய்வம் மனம் திருந்திவிட்டது என்று சொல்கிறார்.

அதே நேரத்தில் பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஒரே ஒரு வார்த்தையில் பாரமான கல் என்று இஸ்ரேலை கூறுவதை பிடித்து தொங்கிக்கொண்டு ஆஹா என்ன அற்புதமாக எதிர்காலத்தை பைபிளின் யாஹ்வே சொல்லிவிட்டது என்று சொல்கிறார்.

தற்போது இவர் உருவியிருக்கும் பாரமான கல்லை எடுத்துக்கொள்வோம்.



அரபு நாடுகள் இதை இன்னும் ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை.தினம் குண்டு வெடிப்புகள்.நியூயார்க் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு காரணமே அமேரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதுதான் என்கிறார்கள்.அதை தொடர்ந்து இனி மேலும் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்க கூடாது என அமெரிக்காவில் பேசப்பட்டது.இப்போது எல்லா நாடுகளும் இஸ்ரேல் விவகாரத்தில் அடக்கிவாசிக்கவே விரும்புகின்றன.இப்படியாய்எல்லோருக்கும் இஸ்ரேல் ஒரு பாரமானகல்.


அரபுநாடுகள் இஸ்ரேலை ஆதரிக்காத காரணம், குரானில் யூதர்களை திட்டுவதுதான் காரணம். அப்போது குரானை உருவாக்கியதற்கு உங்கள் கர்த்தார் யாஹ்வே தான் காரணமா?

அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்க காரணம், ஜெர்மனியில் ஹிட்லரால் கொல்லப்பட்ட இன ஒழிப்பு செய்யப்பட்ட யூதர்களுக்கு நிரந்தரமாக அவர்களை அவர்களே ஆளும் பாதுகாப்பான வாழ்விடம் வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்ததுதான்.

ஆக, ஹிட்லரால் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டதற்கு கர்த்தாரான இயேசுகிறிஸ்துதான் காரணமா?


சரி இதனை முழுமையாக பார்ப்போம்.

கர்த்தா யாஹ்வே ஆன இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்னால் சொன்னது என்னவென்றால், இஸ்ரேலை காப்பாற்றி மற்ற எல்லா ஜாதிகளையும் கொல்லுவாராம். ஏனெனில், இஸ்ரேலும் இஸ்ரேலின் யூத மக்களும் மட்டுமே இயேசுவுக்கு பிடித்தமான மக்கள். மற்றவர்கள் எல்லோரையும் அவர் கொல்லுவாராம்.

கீழே காணப்பட்டுள்ளது பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

3. அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it.

4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
In that day, saith the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the people with blindness.

(இப்போது யார் குதிரை மீது ஏறி போருக்கு வருகிறார்கள்? ஹெஹ்ஹே) டாங்கியிலும் ஏரோபிளேனிலும் வருகிறவர்களுடைய கண்களை குருடாக்குவேன் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும். கர்த்தா யாஹ்வே என்ற ஏசு கிறிஸ்துவுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது. ராத்திரியில் விளக்கு பொருத்திதான் இஸ்ரேலில் தேடுவார். அவருக்கு எப்படி முக்காலமும் தெரியும்? :-)) )

5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
And the governors of Judah shall say in their heart, The inhabitants of Jerusalem shall be my strength in the LORD of hosts their God.

6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
In that day will I make the governors of Judah like an hearth of fire among the wood, and like a torch of fire in a sheaf; and they shall devour all the people round about, on the right hand and on the left: and Jerusalem shall be inhabited again in her own place, even in Jerusalem.

(யூதாவின் தலைவர் என்று இங்கே சொல்லுவது அப்போது யூதாவின் தலைவராக ரோமானிய கவர்னர் இருந்தார். அதனால், யூதாவின் தலைவரை கொல்லுவதாக யாஹ்வே சொல்லுகிறார்.. இப்போது யூதாவை ஆளுவது தாவீது வமிசத்தாரான யூதர்கள்! ஆனால் அது எப்படி 2000 வருசத்துக்கு முன்னாடி யாஹ்வே என்ற உவர்களது தெய்வத்துக்கு தெரிந்திருக்கும்?)

7. தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.
The LORD also shall save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem do not magnify themselves against Judah.

(ஆனால், யூதாவின் தலைவரை நெருப்பில் சுட்டுவிட்டு தாவீதின் வமிசத்தாரான யூதர்களின் குடிமக்களை மட்டுமே ரட்சிப்பார்.. உண்மையடியான் உங்களுக்கு இந்த "ரட்சிப்பை" வழங்கப்போவதாக சொல்லியிருக்கிறதா? )

8. அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
In that day shall the LORD defend the inhabitants of Jerusalem; and he that is feeble among them at that day shall be as David; and the house of David shall be as God, as the angel of the LORD before them.

9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.
And it shall come to pass in that day, that I will seek to destroy all the nations that come against Jerusalem.

--

அதென்ன உங்க கர்த்தா இயேசுவுக்கு எருசலேம் மேல மட்டும் அவ்வளவு பிரியம்? மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?

பாரமான கல்லை பண்ணிவிட்டார் யாஹ்வே என்று சொல்கிறீர்கள். சரி அப்படியே வைத்துக்கொண்டாலும், குதிரைகளை எல்லாம் குருடாக்கிவிட்டிருக்க வேண்டுமே இன்னேரம்? ஆக்கி விட்டாரா? யூதாவின் தலைவரை நெருப்பில் சுட்டுவிட்டாரா? இஸ்ரவேல் குடிகளுக்கு ரட்சிப்பை தந்து சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டாரா?

out of contextஇல் உருவி ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்
.

5 comments:

வஜ்ரா said...

//
அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்க காரணம், ஜெர்மனியில் ஹிட்லரால் கொல்லப்பட்ட இன ஒழிப்பு செய்யப்பட்ட யூதர்களுக்கு நிரந்தரமாக அவர்களை அவர்களே ஆளும் பாதுகாப்பான வாழ்விடம் வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்ததுதான்.
//

தவறு நண்பர் எழில் அவர்களே,


அமேரிக்காவிலும் யூத வெறுப்பு இரண்டாவது உலக யுத்த காலகட்டத்தில் இருந்து வந்துள்ளது. இருந்த நாடுகளிலேயே கொஞ்சம் குறைந்த யூத வெறுப்பு இருந்த நாடு எனச் சொல்லலாம்.

அமேரிக்கா இஸ்ரேலை இன்று ஆதரிக்கக் காரணங்கள் பல, அதில் முக்கியமானது அமேரிக்க ஆதிக்கம் மத்திய கிழக்கில் பலமாக இருக்கவேண்டும் என்ற சுயநலத்தில் இருக்கிறது.
பஹ்ரைன், குவைத், சவுதி போன்ற மத்திய கிழக்கு அரபு நாடுகளின் பிரபுத்துவ ஆட்சிக்கும், மனித உரிமை மீரல்களுக்கும் ஒன்றும் சொல்லாமல் இருக்க அமேரிக்கா ஒத்துக் கொள்வது போல் அமேரிக்காவின் இஸ்ரேல் ஆதரவை அந்த நாடுகள் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.

வரலாற்றைப் புரட்டினால், அரபு தேசங்கள் சிதருண்ட சோவியத் யூனியனின் போர் கருவிகளை வாங்கியதும், அமேரிக்கா இஸ்ரேலை ஆதரிக்க ஒரு காரணமாக அன்று இருந்தது.

Anonymous said...

//அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
//

Today there are lot of friends for Israel.

So this is also not true!

Thanks for this excellent post.

You have lot of knowledge in this book!

Anonymous said...

பாவம் உண்மையடியான்.

இஸ்ரேல் மக்களின் தெய்வத்துக்கு ரொம்பவே தாங்குகிறார்.

Anonymous said...

நச் பதில்!

எழில் said...

இருக்கலாம் சகோதரர் வஜ்ரா,

ஆனால், யூதர்கள் தாங்கள் பாதுகாப்பாக வாழ் ஒரு தனிநாடு கோரினார்கள். அதற்காக மிகவும் முயன்றார்கள். பல நாட்டு தலைவர்களை பல்வேறு விதங்களில் சந்தித்து பல டீல்களை ஏற்படுத்திக்கொண்டு தனி நாடு கண்டார்கள்.

அவ்வாறு யூதர்கள் முயற்சி செய்ததற்கும், அதற்கு பல நாடுகளில் ஆதரவு கிடைத்ததற்கும், ஹிட்லர் யூத மக்களை கொன்றொழிக்க முயற்சி செய்ததுதானே?

ஆகவே ஹிட்லர் கொன்றதற்கு இந்த யூத தெய்வம் யாஹ்வேதான் காரணமா என்பதே கேள்வி.