Thursday, March 27, 2008

சிங்கப்பூரில் பக்தர்களுக்கு அமிர்தானந்தமயி ஆசி

சிங்கப்பூரில் பக்தர்களுக்கு அமிர்தானந்தமயி ஆசி
புதன்கிழமை, மார்ச் 26, 2008




சிங்கப்பூர்: சிங்கப்பூர் சென்றுள்ள மாதா அமிர்தானந்தமயி தேவி பக்தர்களுக்கு ஆசி வழங்குவதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அளிக்கவுள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள மாதா அமிர்தேஸ்வரி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

உலகம் முழுவதும் பக்தர்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி, 'மக்கள் தரிசன' நிகழ்ச்சிக்காக இப்போது சிங்கப்பூருக்கு வந்துள்ளார். ஒரு வாரம் தங்கியிருந்து 20 ஆயிரம் பக்தர்களுக்கு அவரது அன்பு அரவணைப்பால் ஆசி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏழை மக்களுக்கான அன்னதானத்தை தொடங்கி வைத்து, உடல் ஊனமுற்றோருக்கு 30 வீல்சேர்களை வழங்குகிறார்.

மேலும், 100 மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியையும் வழங்குகிறார். சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்துக்கு 50 மரக்கன்றுகளை தானமாக அளிக்கின்றார்.

மாதாவின் வருகையெயொட்டி சிறப்பு ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

வடுவூர் குமார் said...

காலை செய்தித்தாளிலும் இந்த செய்தியை பார்த்தேன்.