பாகிஸ்தானில் பெஷாவர் அருகே பரச்சினாரில் ஷியா கூட்டத்தில் சுன்னி பிரிவினர் சுட்டதால் ஆரம்பித்த கலவரத்தில் இதுவரை 40 பேர்கள் கொலையுண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
இதுவரை ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினரின் வீடுகள் கொளுத்தப்பட்ட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட சுன்னி பிரிவினர் வீடுகளும் கொளுத்தப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி மற்றவர்களை கொலை செய்கின்றனர்.
இந்த கலவரத்தை நிறுத்த ஹெலிகாப்டர் கன்ஷிப்புகளில் பாகிஸ்தான் ராணுவம் இரு தரப்பு நிலைகளையும் கனரக ஆயுதங்களால் தாக்கி வருகிறது..
இன்னும் கலவரம் நின்றதாக தெரியவில்லை...
கூகுள் செய்திக்கோவை
இவர்கள் மனம் திருந்தவேண்டும் என்று பிரார்த்திப்பீர்களே என்ன ஆயிற்று?
ReplyDeleteநம்பிக்கை போய்விட்டதா?
நன்றி அனானி :-)
ReplyDeleteவிட்டுப்போய்விட்டது. அவ்வளவுதான்.
ஆனால் பிரார்த்தனைக்கு பலன் உண்டு. அடுத்த பதிவில் இப்படிப்பட்ட மதவெறிகளுக்கு எதிராக பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடுவதை பார்த்தீர்களா?
அதுதான்..
தான் ஆரம்பித்த வன்முறை வழிக்கே வீழ்கிறது பாகிஸ்தான் :(
ReplyDeleteஇது நிச்சயம் இந்தியாவிற்கு கெட்ட செய்தி.