Sunday, October 01, 2006

இன்னுமா நம்புகிறார்கள்?

சுவனப்பிரியன் பதிவு அபு முஹை பதிவு என்று படித்துக்கொண்டிருந்தேன்.

ஆச்சரியமாக சுவனப்பிரியன் ஆதாம் ஏவாள் .. ஆதாமை அல்லா படைத்தார் என்று எழுதியிருக்கிறார்.

அபு முஹை கூட ஆதாம் ஏவாள் என்று எழுதியிருக்கிறார்.

இன்னுமா இதையெல்லாம் நம்புகிறார்கள்?

ஆதாம் ஏவாள் என்றெல்லாம் யாரும் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தாகி விட்டது என்றல்லவா நினைத்திருந்தேன்.

இன்னும் ஏதோ தீர்மானமாய் அல்லா ஆதாமை உருவாக்கியதை பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதியிருப்பதை பார்த்து ஆச்சரியம்

பரிணாமம் அறிவியல் இல்லையா? குரான் அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்று எழுதிக்கொண்டிருப்பவர்கள் இப்படி ஆதாம் ஏவாள் என்று எழுதுவதை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ம்...

33 comments:

  1. ஆதாம் ஏவாள் இல்லாமல் மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

    ReplyDelete
  2. /ஆதாம் ஏவாள் இல்லாமல் மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்?/

    குரங்கிலிருந்து வந்தார்கள்.

    ReplyDelete
  3. குரான் அறிவியல் பூர்வமானது. பெஸ்ட் ஜோக்.

    ReplyDelete
  4. நன்றி அனானிகள், ஜெயராமன்

    குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள் என்பது ஆராய்ந்து அறிந்த அறிவியல் செய்தி என்பதுதான் நான் அறிந்தது.
    இதனை "கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" என்று கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் பாடி பாடலாகவும் பிரபலப்படுத்தினார்.

    இவ்வளவு காலம் சென்று இன்னமும் ஆதாம் ஏவாள் என்று கூறிக்கொண்டிருப்பதைக் காணும்போது ஆச்சரியமே மீதுகிறது.

    ReplyDelete
  5. //
    ஆதாம் ஏவாள் இல்லாமல் மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
    //

    ஹெ ஹெ...இது தெரியாதா, ஒருத்தன் வாயில இருந்து வந்தான்...அதனால அவன ஏண்டா வாயில இருந்து வந்தவனே என்று வாயில் வந்த வார்த்தை வைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள்...இவர்களிடம் போய் பரிணாமம் என்றெல்லாம் பேசினீர்கள் என்றால், பரிணாமமா அது கிலோ என்ன விலை என்பார்கள்..

    ReplyDelete
  6. ஜயராமனும், வஜ்ராவும் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்பது உண்மை தான் போல இருக்கிறது.

    எழில் நீங்கள் அருகிருந்து பார்த்தீர்கள் அல்லவா?

    இப்படிப் பதிவு போட்டு விளம்பரம் தேடுவதற்குப் பதில் சம்பந்தப் பட்ட அவர்களிடமே போய்ச் சென்று விவாதிக்கலாமே?

    ReplyDelete
  7. நண்பர் அபுமுஹை இந்த பதிவுக்கு பதில் எழுதியிருக்கிறார்

    http://abumuhai.blogspot.com/2006/10/blog-post.html

    ReplyDelete
  8. //
    ஜயராமனும், வஜ்ராவும் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்பது உண்மை தான் போல இருக்கிறது.
    //


    வாயிலிருந்து வந்ததாகச் சொல்லி வலைப்பதிவுகளில் வாந்தி எடுக்கும் நபர்களைப் பற்றிச் சொன்னால் நாங்கள் குரங்குகளா?

    I am least bothered in this Biblical Creationist and Darwinian Evolutionist Debate. Science has discarded Creation as any model for explanation. Evolution is true, although we cannot explain complexities yet. But, the model successfully explains a lot of things.

    The Best proof for evolution is Fossils.

    ReplyDelete
  9. //ஆதாம் ஏவாள் என்றெல்லாம் யாரும் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தாகி விட்டது என்றல்லவா நினைத்திருந்தேன்.//

    When? Where? Who?

    ReplyDelete
  10. //குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள் என்பது ஆராய்ந்து அறிந்த அறிவியல் செய்தி என்பதுதான் நான் அறிந்தது.//

    எழில் சார்,
    இதை இஸ்லாமும் மறுக்கவில்லை. இறைவனுக்கு மாறு செய்த மனிதர்கள் சிலரே குரங்குகளாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ReplyDelete
  11. இவ்வளவு அத்தாரிட்டியா எழுதறவங்க ஏதேனும் பேர் போட்டு எழுதலாமே?
    பதில் கூற மற்றவர்களுக்கு வசதியாக இருக்குமே

    ReplyDelete
  12. சகோதரர் அபுமுஹையின் பதிவில் எழுதிய பின்னூட்டம்


    அன்புள்ள அபுமுஹை,
    உங்கள் பதிவுக்கு நன்றி.

    பல அறிவியல் விஷயங்கள் இப்படித்தான். பார்ப்பதும் பொய், கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பதுதான் அறிவியல் என்று நினைக்கிறேன். உதாரணமாக தோற்றத்துக்கு தட்டை போல மனிதனுக்கு தோன்றும் பூமி உண்மையில் உருண்டையானது. அந்தக் காலத்தில் பூமி ஒரு உருண்டை என்று சொன்னபோது, அதெப்படி, அப்போது தண்ணீர் எல்லாம் வழிந்து போய் விடுமே என்று கேட்டார்கள்.
    அதே போலத்தான் பரிணாம அறிவியலும். அதுவும் இந்த அறிவியல் நம்மைப் பற்றியது. உயிரினங்கள் பற்றியது. இந்த அறிவியலில் நடக்கும் பரிசோதனைகள் நடத்துவதற்கே வெகுகாலமாகும். ஏற்கெனவே பூமியில் இருந்து அழிந்த உயிரினங்கள் கொண்டும், பரிணாம அறிவியல் தோன்றிய பின்னர் நடந்த மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டும், இதன் உண்மையை அறிகிறோம்.

    எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் குரான் கூறுகிறது என்றுதான் எழுதி வருகிறீர்கள் என்று படித்து வந்தேன்.

    ஒரு சில அறிவியல் அறிவுகளை குரான் ஒப்புக்கொள்ளவில்லை என்று இப்போது கூறுகிறீர்கள்.

    எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை குரான் ஒப்புக்கொள்ளவில்லை என்று பட்டியலிட்டால் அறிந்துகொள்ள உதவும்

    உங்கள் பொறுமையான பதில்களுக்கு நன்றி
    எழில்

    ReplyDelete
  13. //எழில் சார்,
    இதை இஸ்லாமும் மறுக்கவில்லை. இறைவனுக்கு மாறு செய்த மனிதர்கள் சிலரே குரங்குகளாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.//

    This is not corroborated by Science.
    Sorry

    ReplyDelete
  14. //இவ்வளவு அத்தாரிட்டியா எழுதறவங்க ஏதேனும் பேர் போட்டு எழுதலாமே?//

    Oh Yes, My Name is XYZ

    Now tell me,
    //ஆதாம் ஏவாள் என்றெல்லாம் யாரும் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தாகி விட்டது//

    Who proved? How Proved? When proved?

    ReplyDelete
  15. //
    Who proved? How Proved? When proved?
    //

    இந்தியாக்கு சொதந்திரம் கெடச்சிருச்சா? எப்ப? யாரு கொடுத்தது? எப்படி? கிலோ என்ன வெல?

    ReplyDelete
  16. //ஆதாம் ஏவாள் என்பதே கதை தானே.//

    அது உங்களின் கருத்து. இதற்கு மாற்றாக நீங்கள் சொல்வது பரிணாமக் கொள்கையை. ஒரு செல் உயிரி பிறகு ஊர்வணவாகி பிறகு அதற்கு தானாக விட்டலாச்சாரியா படம் போல் கால்கள் முளைத்து பிறகு குரங்கு என்ற நிலைக்கு வந்து இன்று மனிதனாகியிருக்கிறானாம். மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது என்றால் பதில் சொல்லத் தெரியாது. அமெரிக்காவில் நேற்று ஒரு மனிதன் குரங்காக பரிணாமம் பெற்றான், இன்று ஜப்பானில் பரிணாமம் நடந்துள்ளது என்று எந்த பத்திரிக்கையிலும் செய்திகளையும் நாம் பார்க்க முடிவதில்லை. பரிணாமத் தத்துவம் என்பதே இன்று வரை நிரூபிக்கப் படாத ஒரு கோட்பாடு என்பதை தங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'

    4 : 1 - குர்ஆன்

    குர்ஆன் கூறும் இந்த உண்மையைத்தான் இன்றைய அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எந்த மார்க்கத்தில் மனிதன் உருவாகி பல்கிப் பெருகினான் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

    ReplyDelete
  17. அறிவியலில் இவ்வளவு முட்டாள்கள் இருப்பார்கள் என்பது பெரும் அதிர்ச்சி. பரிணாம வளர்ச்சி என்பது லட்சக் கணக்கான ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக நடைபெறும் மாற்றங்களாகும். எடுத்துக் காட்டாக, மனிதர்கள் 500 ஆண்டுகளுக்கு முனபு இருந்த்தவர்களை விட இப்போது உயரமானவர்கள். வருகின்ற சிறிய மாற்றங்களினால் அது அனுகூலமாக இல்லை என்றால் அந்த உயிர் மறைந்து விடும். அனுகூலமாக உள்ளதென்றால் அது தப்பிப் பிழைக்கிறது. இப்படியே மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடவுள் இந்த மாற்றங்களைத் தந்து கொண்டு இருக்கிறாரா?

    அறிவிலார்க்கு உரைப்பவர் அவரிற் பேயரே.

    ReplyDelete
  18. This feedback is addressed to "ஆதாம், ஏவாள் எனும் ஜோடி :
    அபூ முஹை." In fact, I am shooting it here, since, this is where the Origin of the Issue started :-)

    //'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

    ஏனுங்க, ஒரு சினை முட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து இம்புட்டு பெரிய ஜடங்களான நம்மை, இரண்டு, நான்கு, எட்டுன்னு பல்கிப் பெருகிதானேங்க எங்கன மூஞ்சி இருக்கிறது, எங்கன கையிருக்கிறது, இப்படி எல்லா செய்திகளையும் மரபணு மூலம செய்தி கோர்வைகள் எடுத்திட்டு போறது, யாரு சொல்லி?

    அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே, என்று சிந்திச்சு அது தொடர்ப நிறைய காலங்களையும் ஆராய்ச்சில் செலவு செஞ்சு சிந்திக்கும் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூற்றுக்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

    என்கிட்ட காட்டு இது எல்லாத்துக்கும் ப்ரூப்பேன்னு அடம் பிடிச்ச எப்படிப்பா. சின்னப் பிள்ளைங்க விளையாட்டு மாதிரி இருக்குது. மில்லியன் வருஷமுன்ன என்னமோ ஒரு நூற்றாண்டு மாதிரி நினைச்சுக்கிட்டும் பேசிகிட்டும் இருக்கிறோம்.

    சரி 68 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் இந்த சூப்பர், டூப்பர் மூளையைக் கொண்ட கடவுளின் புதல்வன் எங்கே இருந்தான்? உடனே நீங்கள் அப்ப மனுஷன் இருந்தானா இல்லையான்னு எப்படி உங்களுக்கு தெரியும், பக்கத்தில இருந்து நோட் எடுத்தியான்னு கேட்கப் புடாது... யோசிக்கணும், அந்த புத்தகத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுப்புட்டு மத்த புத்தகங்களையும் படிக்கணும்...

    இப் பூமியில் நம்மின் தற்காலிக இருப்பும் ஒரு சான்ஸ் மட்டுமே... இதில் இன்னும் கொஞ்ச காலங்களுக்கு இருந்து போயிச் சேறுவதா, இல்லை அடித்துகொண்டு சீக்கிரமா போயிச் சேறுவதா என்பது நமது கையிலும் இருக்கிறது.

    டைனோசார்களுக்கு அதி பயங்கர பசின்னா, நமக்கு அதி பயங்கர "மதம்"பிடிச்ச மதம் பிடிச்சிருக்கு இது இரண்டுமே எடுத்திட்டு போய்ச் சேர்ந்த இடம் ஒண்ணாத்தான் இருக்கப் போகுதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

    To sum it up, I am tired of answering to anymore religious belief Vs scientific facts... there is no hope in there.

    One more question, WHERE IS THE GOD? HOW HE/SHE/IT LOOKS LIKE??? HAS ANYONE SEEN HIM/HER/IT???

    ReplyDelete
  19. உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் எப்படி வர முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.

    ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வந்த ஆய்வுக்கட்டுரை இது பற்றி நடந்த பரிசோதனையையும் அதில் வெற்றி பெற்றதையும் இங்கே குறிப்பிடுகிறது.

    அந்த பத்திரிக்கையில் வந்த ஆய்வுக்கட்டுரை, இது போன்று பரிணாமத்தை எதிர்க்க கேள்வி கேட்பவர்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    http://www.evilbible.com/Synthetic_Life.htm

    ReplyDelete
  20. //அது உங்களின் கருத்து. இதற்கு மாற்றாக நீங்கள் சொல்வது பரிணாமக் கொள்கையை. ஒரு செல் உயிரி பிறகு ஊர்வணவாகி பிறகு அதற்கு தானாக விட்டலாச்சாரியா படம் போல் கால்கள் முளைத்து பிறகு குரங்கு என்ற நிலைக்கு வந்து இன்று மனிதனாகியிருக்கிறானாம்.//
    உங்களுக்கு நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், ஏறத்தாழ அதுதான் உண்மை.

    // மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது என்றால் பதில் சொல்லத் தெரியாது. //
    மனிதனுக்குப்பிறகு பரிணாமம் நின்றுவிட்டது என்று யாரும் சொல்லவில்லை. பரிணாமம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
    //அமெரிக்காவில் நேற்று ஒரு மனிதன் குரங்காக பரிணாமம் பெற்றான், இன்று ஜப்பானில் பரிணாமம் நடந்துள்ளது என்று எந்த பத்திரிக்கையிலும் செய்திகளையும் நாம் பார்க்க முடிவதில்லை.//
    உங்கள் குழந்தையை தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அது வளர்வது உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அணு அணுவாய் நடைபெறும் மாற்றங்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆப்பிரிக்காவில் ஒரு குழுவிலிருந்து (கவனியுங்கள் ஒரு ஆண் ஒரு பெண்ணிடமிருந்து அல்ல) தோன்றி உலகெங்கும் பரவிய மனித குலத்தில் ஆப்பிரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வித்தியாசங்களை இன்று சொல்ல முடிகிறது. இன்று மனிதர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் இனங்களைத் தாண்டி திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், தொடர்பே இல்லாமல் ஒரு மனித இனம் மாறுபாடு அடைந்து போய்விட்டால், அது மற்ற மனித இனத்துடன் திருமணம் செய்து குழந்தை பெற இயலாது. அப்போது அது ஒரு தனி இனமாக கருதப்படும். இதனை spaciation என்று பரிணாமவியலாளர்கள் அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பல புதிய இனங்களை பரிணாமவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இது குறைந்த ஆயுளும் அதிக எண்ணிக்கையும் கொண்ட பல உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக ஆயுள் கொண்ட மனித இனத்தில் இப்படி spaciation நடப்பதற்கு வெகு காலமாகும் அல்லவா.
    // பரிணாமத் தத்துவம் என்பதே இன்று வரை நிரூபிக்கப் படாத ஒரு கோட்பாடு என்பதை தங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.//
    இல்லை நிரூபிக்கப்பட்டுவிட்ட கோட்பாடு. இன்றைக்கு எந்த பல்கலை உயிரியல் பேராசிரியரும் இதனை மறுப்பதில்லை.

    //'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'

    4 : 1 - குர்ஆன்

    குர்ஆன் கூறும் இந்த உண்மையைத்தான் இன்றைய அறிவியலும் ஒத்துக் கொள்கிறது.//
    அறிவியல் ஒப்புக்கொள்கிறது என்று கூறினால் எப்படி? யார் எந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இதனை எழுதி நோபல் பரிசு வாங்கினார் என்று கூறுங்கள்.
    // இதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எந்த மார்க்கத்தில் மனிதன் உருவாகி பல்கிப் பெருகினான் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.//
    அதனை மேலே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. நல்ல தெளிவான விளக்கங்கள்.

    ஆனால், பரிணாமத்தின் ஆதார சுருதியான ம்யூடேஷன் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

    யாரேனும் நல்ல தமிழில் பரிணாமத்தை பற்றி எளிய தமிழில் எல்லோருக்கும் புரிவது போல எழுதி, இதனைச் சுற்றி இருக்கும் தவறான கருத்துக்களை தெளிவு படுத்தி விளக்கினால், தமிழர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

    முனைவர் சுந்தர மூர்த்தி அவர்கள் போல அறிவாய்ந்த பலர் இதன் பொருட்டு முன்வர வேண்டும்.

    ReplyDelete
  22. //'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'

    4 : 1 - குர்ஆன்//

    அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் என்ற கடைசி வாக்கியம் உண்மையா?அப்படியென்றால், அவ்வாறு உருவான ஆண்களும் பெண்களும் அண்ணன் தங்கை அல்லது அக்கா தம்பி போன்ற உறவு முறைகளை கொண்டவர்கள்தானே?எப்படி அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடியும்?எப்படி அவர்கள் செக்ஸில் ஈடுப்படமுடியும்?
    இவ்வளவு காலமாக ஆண்கள் சொந்த தங்கை அல்லது அக்காவையா திருமணம் செய்துக்கொண்டார்கள்?பெண்கள் அண்ணன் அல்லது தம்பியா திருமணம் செய்துக்கொண்டார்கள்?

    அடக்கடவுளே!!!

    ReplyDelete
  23. இந்துமதத்தில் பரிணாமம் பற்றி சொல்லப்படவில்லை. அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்பது போல ஜயராமன் எழுதியிருக்கிறார்.

    அது உண்மையல்ல.

    இந்துக் கடவுள்களின் பின்னே இருக்கும் அரைவட்ட வடிவ அலங்காரம், பரிணாமத்தை குறிக்கிறது. அருவமாக இருக்கும் பொருள் மெல்ல மெல்ல ஒழுங்கடைந்து செல்வதையே குறிக்கிறது.

    தசாவதாரங்களும், பரிணாமத்தையே குறிக்கிறது என்பர் இந்து ஞானியர். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகவதாரம் ஆகியவை போன்று தண்ணீரில் நீந்தும் மீனாகி, பிறகு ஆ·ம்பியனான ஆமையாகி, அதன் பின்னர் தரையில் வாழும் வராகமாகி, பின்னர் மனிதனும் மிருகமும் இணைந்த நரசிம்மமாகி என்று பரிணாமப்பாதை நீள்வதையே தசாவதாரம் என்றும், ஒவ்வொரு பரிணாம jumpஐயும் இறைவனே நடத்துகிறான் என்பதையும் கூறுவர்.

    ReplyDelete
  24. பரிணாம அறிவியல் இந்து மத சிந்தனைகளுக்கு புறம்பானது அல்ல என்பதை அலர்மேல் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

    முஸ்லீம் மதத்தலைவர்களைப்போலவும் கிரிஸ்துவ மதத்தலைவர்களைப் போலவும் இந்து மதத்தினர் பரிணாமத்தை எதிர்க்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமா.

    நன்றி

    ReplyDelete
  25. --------------------------------------------------------------------------------


    இனி வரும் காலங்களில் இயற்கைவாதி டார்வினின் கொள்கையான "ஒரு பிரிவு விலங்கினத்திலிருந்து மற்றது வந்தது" என்ற கொள்கயை பள்ளியில் பாடமாகச் சொல்லிக் கொடுக்க இயலாது. "உயிர் இனங்களின் தோற்றம்" (orgin of species) என்ற அவருடைய புத்தகம் இனி உயிரற்றதாகிவிடப் போகிறது. பல்வேறான உயிர்கள் எப்படித் தோன்றின என்பதை விளக்குவதாகக் கருதப்படும் இக்கொள்கை, பல விலங்கியல் நிபுணர்களுக்கு சமீப காலம்வரை வேதப் புத்தகமாகவே கருதப்பட்டு வந்தது. அவருடைய விளக்கங்கள் பல இடங்களில் சுவையான விடயங்களாகத் தோன்றினாலும் ஆங்காங்கே எழும் ஐயப்பாடுகளை நேரடியாக தீர்க்க இயலாது மெழுகப்பட்டிருப்பது பல அறிவியலாளரை உறுத்தாமல் இருந்ததில்லை. பறவை இனத்திலிருந்து ஊர்வன வந்தன என்பதை ஊர்சிதப்படுவதாகக் கருதப்படும் ஆர்கியாப்டிக்ஸ்(archeoptics) என்ற பறவை மற்றும் உடும்பு போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு புதை படிவம் (fossil) இத்தனை நாட்களாக ஒரு சப்பைக் கட்டாக இருந்து வந்திருக்கிறது என்பதும் சமீபத்தில் நிரூபணமாகியிருக்கிறது.

    ID - இந்த இரண்டு எழுத்துக் கொண்ட ஆங்கில சுருக்கச் சொல்லை பல்வேறு இடங்களில் நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். இப்போது இயற்கைவாதிகள், விலங்கின அறிவியலாளர் ஆகியோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதும் இந்த இரண்டு எழுத்துக்கள்தாம். இதன் முழு விளக்கம்: Inteligent Design. சரி இதற்கும் உயிரினங்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? ஆம், இவ்வுலகின் காணும் படைப்புக்கள் எல்லாம் தானாக ஒன்றிலிருந்து ஒன்று வந்தவை இல்லை, அறிவினால் மேம்பட்ட ஒரு சக்தியால் திட்டமிடப்பட்ட படைப்பினங்களாக, "டிசைன்" செய்யப் பட்டு படைக்கப் பட்டவையே என்பதாகும். இந்தச் சக்தியை 'இறைவன்" என்று இவ்வுண்மையைச் சொல்பவர்கள் நேரடியாகக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் மானுடத்தை மிஞ்சிய அரிய சக்தி என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் இறைவன்றி வேறு யாராக இருக்க முடியும்?

    வெறும் வெளித் தோற்றத்தின் ஒற்றுமையை வைத்துக் கொண்டு ஒன்றிலிருந்து இன்னொன்று வந்தது என்கிற டார்வின் வாதம் ஒரு தத்துவமே(concept) அன்றி வேறில்லை. தத்துவங்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்ட உண்மைகள் அல்ல. பல விலங்கியலாளர்கள் டார்வினின் தத்துவத்தை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முற்பட்டபோது ஏகப்பட்ட தடங்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பரிணாமம் என்பது ஒன்றுகொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். புறத் தோற்றத்தில் ஒற்றுமையாக இருக்கும் பல உயிரினங்களின் உள்ளுறுப்புக்களின் அமைப்போ தன்மையோ ஒத்திருப்பதில்லை. எடுத்துக் காட்டாக மனிதனின் இதய அமைப்பு குரங்கினுடையதை ஒத்திருப்பதில்லை. ஆனால் தொடர்பே இல்லாத பன்றியின் இதய அமைப்பு மனிதனின் இதய அமைப்போடு சற்று ஒத்துவருகிறது. இம்மாதிரி பல்லாயிரக்கணக்கான ஜீன்கள் தொடர்பான வேறுபாடுகள் ஓர் உயிரினத்திலிருந்து மற்றது வந்ததில்லை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆக, ஒவ்வோர் உயிரனமும் அவற்றின் அமைப்பிற்கும் அவை வாழும் சூழ்நிலைக்கும் ஒத்தமைய அவைகளுக்குத் தேவையான உள்ளுறுப்பாயினும் சரி தோற்றமாயினும் சரி திட்டமிடப்பட்டே அமைக்கப் பட்டிருக்கின்றன.


    திருக் குர்-ஆனில் கூறப்பட்டிரும் பல விடயங்களுடன் இன்று விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறும் முடிபுகள் ஒத்துப் போகின்ற போக்கினைப் பார்க்கிறோம். அந்த வரிசையில் இதுவும் ஒன்றாக அமைந்தால் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

    மேற்கண்ட தகவல் http://www.adirai.com/index.php?module=subjects&func=viewpage&pageid=171280 சுட்டியில் கிடைக்கிறது. பதித்தவர் நம் தமிழ்கணிமைக் கொடையாளர் மறைந்த உமர்தம்பி.

    Posted by அதிரைக்காரன் | Mon Oct 02, 12:40:27 PM


    --------------------------------------------------------------------------------


    //அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே//

    எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதான் பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆதாரபூர்வமாக எதுவும் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

    ஆனால் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

    1) உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் பூமியின் மீது மோதிய போது இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா? அல்லது பல உயிர்கள் தோன்றினவா?

    2) உயிரினங்கள் தாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால், உலகெங்கிலும் வசிக்கும் மனிதர்கள் ஒரே உடலமைப்பை கொண்டிருப்பது எப்படி? பனிப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கு கரடிகளைப்போல உடலெங்கும் முடியும், பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஒட்டகத்தைப் போன்ற திமிலும், கடற்புறங்களில் வசிப்பவர்களுக்கு மீனைபோல செதிளும் இல்லாமற் போனதேன்?

    3) குரங்கிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது பரிணாம கோட்பாடு. இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?

    Posted by இப்னு பஷீர் | Mon Oct 02, 08:45:35 PM


    --------------------------------------------------------------------------------


    ஐயா வஜ்ரா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் விடையலிக்கவில்லையே

    *//உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் இதுவரை எந்த குரங்கும் மனிதக் குழந்தையை ஈன்றெடுக்கவில்லையே//*

    *//உங்கள் பரினாமவள்ர்ச்சி ஏன் மனிதனுடன் நின்றுவிட்டது//*

    இதற்க்கு பதிலளிக்க முடியுமா?'பரினாமவள்ர்ச்சி அடைந்த தங்களின் மூலையால்' முடியுமா ?

    Posted by இறையடியான் | Mon Oct 02, 09:47:02 PM

    ReplyDelete
  26. இப்னு பஷீர், இறையடியான் ஆதிரைக்காரன் ஆகியோரின் கேள்விகளுக்கு இந்த பதிவில் முன்னமே பலர் பதில் எழுதியிருக்கிறார்கள்.

    அவர்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  27. தெக்கிக்காட்டான் அவர்கள் பதிவான
    http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post.html
    இல் எழுதியது

    தெக்கிக்காட்டான் அவர்கள் சொல்வது போல பதிவை விட பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள்தான் நிறைய சொல்கின்றன.

    எனக்கு என்ன பிரச்னை என்றால், இப்படி எழுதுவதை முஸ்லீம் பிரச்சார பதிவாளர்கள் படிப்பதுமில்லை, அதனை புரிந்து கொள்ள முயற்சி செய்வதுமில்லை.

    பரிணாமத்தை எதிர்த்து ஏதேனும் பக்கச்சார்புள்ள "குரான் சொல்வதெல்லாம் வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து உண்மை" என்று சொல்லக்கூடியவர்கள் இண்டலிஜன்ஸ் டிஸைன், கிரியேஷனிஸம் என்று சூடோ சயின்ஸ் எழுதி வைப்பதை மேற்கோள் காட்டுகிறார்கள்.

    பரிணாமம் தவறு என்றால், டி.என்.ஏ எலக்ற்றானிஸ், நாம் எழுதும் இண்டர்னெட் எல்லாமே இருக்காது என்பது அவர்களுக்கு புரிவதே இல்லை. அணுக்கொள்கைதான் டி.என்.ஏ மூலக்கூறு வை புரிவதற்கு அடிப்படை. அந்த மூலக்கூறு காப்பி பண்ணுவதில் நடக்கும் தவறுகள்தான் ம்யூட்டேஷன், அந்த ம்யூட்டேஷனால்தான் பரிணாமம் நடக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையற்றதாக இருக்கிறது.

    இவ்வளவு எழுதிய பின்னரும் ஏதேனும் ஒரு பதிவர் திரும்பி பழைய டேப்பை ஓட்டப்போகிறார். தெக்கிக்காட்டான் மண்டையை பிச்சிக்கொள்ள போகிறார்.

    ReplyDelete
  28. Evolution is a theory with many holes in it. NO logical scientists argues different. As with a profound respect for God-the scientist, I have no problem, none, with evolution. When I get to heaven and God were to come up to me and say, wow, you guys were on the right track, evolution was the key driver to my development of Man over billions of years starting in soup, I would say, “cool”. I do however have a problem with scientists who state evolution as fact. It is not. It has many UNPROOVED aspects to it.

    The latest and most interesting I have heard to overcome evolutions many holes is what was termed the rat to bat theory. Meaning, rats did not become bats over a million years, the changes between bat and rat in the tweener stages would never have survived as a bat needs ALL of what it has to survive and there has never been a tweener found, like thousands of other examples in the biological world. I semi blind not a great flyer with poor sonar bat, is a dead bat.

    No, they think one day, a rat gave birth to a FERTILE bat not very far off from the tweaking evolution then applied to this rat-bat. One mutation somehow DROVE the next and we did it all at once.

    This is a great theory and has the advantage from the evolutionist point of view in that it cannot be disproved. Thus evolution is taken on faith or dare I say, just like a religion.
    Teesta

    ReplyDelete
  29. டார்வினிடம் ஒரு சிலர் "டார்வினின் தந்தை ஒரு குரங்கு" என்று கேலி பேசினர்.

    அதற்க்கு அவர் என் தந்தை யார் என்று தெரியாதிருப்பதைவிட குரங்கு என்று தெரிந்தது எவ்வள்வோ மேல் என்றார்.

    ஆனா சரியான காமடி என்னனா பரிமாண வள்ர்ச்சியை காமி அப்படினு கேக்குறதுதான். இவர்கள் எப்பவும் இப்படித்தானா, அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?..
    புரியல.

    உயிரினங்களில் நடக்கும் பரிணாம வளர்ச்சி நின்றுவிடவில்லை. ஆனால் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் அதன் வளர்ச்சிவேகம் குறைந்துவிட்டது.

    மனிதன் பூமியில் தோன்றி 3-4 பில்லியன் வருடங்கள்தான் ஆகின்றன. இதுவும் கிடைத்த தடயங்களை வைத்தே. டையனோசர்கள் 20பில்லியன் வருடங்கள் பூமியில் வாழ்ந்த உயிரினம். அவைகளை என்ன கடவுள் படைத்தி பின் தவறு என்று எரேஸ் பண்ணிட்டாரா?.தற்போது உள்ள பறவைகள் டையனோசர்களிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று என்ற கூற்றும் உள்ளது.

    மனிதர்களில் பரிணாம வளர்ச்சி கேட்பவர்களுக்கு,
    1.எஸ்கிமோக்கள்
    இவர்கள் குட்டையானவர்கள். அதிகமான உடல் பருமன் உடையவர்கள்.
    1.ஆப்புரிக்கர்கள்.
    இவர்கள் உயரமானவர்கள். அதிக பருமன் இல்லாதவர்கள். குறைந்த அளவு உடல் முடி கொண்டவர்கள்.

    இவைகள் அனைத்தும் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்பட்ட மாற்றங்கள்.

    ReplyDelete
  30. ரவி சிரினிவாஸ் உங்கள் வருகைக்கு நன்றி!

    //மத அடிப்படைவாதிகள் பரிணாமத்தினை ஒப்புக் கொண்டால்
    தங்கள் நம்பிக்கைகள் சில பொய் என்று ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கருதுவதால் பரிணாம
    தத்துவம் குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.அதை பகுத்தறிவற்றவர்கள் நம்பலாம்.
    பகுத்தறிவுள்ளவர்கள் அவற்றை ஏற்க மாட்டார்கள்.//

    இதேதான் எனக்கும் உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. பரிணாமத் தத்துவத்தை உயர்த்தவில்லை என்றால் இஸ்லாம் கூறும் மனிதப் படைப்பு உண்மையாகி விடும் என்பதால் தொடர்ந்து அனுமான அறிவியலை அவதூறாகப் பரப்பி வருகிறீர்கள்.

    அன்புடன்,
    அபூ முஹை

    Posted by அபூ முஹை | Tue Oct 03, 02:15:14 PM


    --------------------------------------------------------------------------------


    //இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதகெனவே//

    இயற்கை நேசி அவர்களே! உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி.

    'இருக்கலாம்' 'சாத்தியம் இருக்கிறது' என்றெல்லாம் சொல்லப்படும்போது 'அப்படி இல்லாமலும் போகலாம்' என்ற சாத்தியக்கூறும் இருக்கிறது என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

    பரிணாம கோட்பாடு என்பதே இன்றுவரை இதுபோன்ற 'இருக்கலாம்'களின் அடிப்படையில் கட்டப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகையாகத்தான் இருக்கிறது.

    நீங்கள் தந்த சுட்டி ஒன்றில் லூசி என பெயரிடப்பட்ட fossil பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைத்தால் இந்த சுட்டியில் உள்ள மறுப்பு விளக்கத்தையும் படித்து பாருங்கள். http://www.harunyahya.com/nas09.php

    ..Contrary to the claims of the NAS, far from supporting evolutionary theories, recent discoveries regarding the origin of man actually undermine them. Fossil discoveries are tearing down the evolutionary trees that scientists have been attempting to construct for dozens of years, while biochemical comparisons show that the genetic differences between human beings and apes are much greater than had been supposed. Admissions of error in well-known scientific magazines and evolutionist publications are a of clear indication of this...

    ..fossil discoveries and other findings in recent years have shown that there is no scientific basis to the claim that human beings and apes are descended from a common ancestor..

    ரவி சிரினிவாஸ், உங்கள் சுட்டிக்கு நன்றி. நான் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் NAS Booklet-ல் உள்ள தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.

    Posted by இப்னு பஷீர் | Wed Oct 04, 09:10:21 AM

    ReplyDelete
  31. இறையடியானுக்கு பதில்கள்

    *//உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் இதுவரை எந்த குரங்கும் மனிதக் குழந்தையை ஈன்றெடுக்கவில்லையே//*

    *//உங்கள் பரினாமவள்ர்ச்சி ஏன் மனிதனுடன் நின்றுவிட்டது//*

    இதற்க்கு பதிலளிக்க முடியுமா?'பரினாமவள்ர்ச்சி அடைந்த தங்களின் மூலையால்' முடியுமா ?

    Posted by இறையடியான் | Mon Oct 02, 09:47:02 PM

    சகோதரர் இறையடியான் கேட்டிருக்கும் கேள்வியை இப்படிப்பார்ப்போம்.

    ஒரு குழந்தையை பார்க்கிறீர்கள். அந்த குழந்தை கிழவனாகி விடும் என்று ஒருவர் சொல்கிறார். அதற்கு இறையடியான், "இதுவரை எந்த குழந்தையும் கிழவனானதை பார்க்கவில்லையே என்று கேட்கிறார். அதற்குஎன்ன பதில்? நீ வெகுகாலம் வெகுகாலம் வாழ்ந்திருந்தால், அந்த குழந்தை கிழவனானதை பார்க்கலாம் என்றுதான் பதில்.

    ஒரு குழந்தை திடீரென்று கிழவனாவதில்லை. "நேற்று இந்த குழந்தை கிழவனானது" என்று செய்தி எழுதுவதில்லை.

    ஒரு குழந்தை கிழவனாக ஆவது அணு அணுவாக தினந்தோறும் நடக்கிறது. குழந்தையை வளர்ப்பவர்களுக்குக் கூட தினந்தோறும் குழந்தை வளர்வது கண்ணுக்குத் தெரிவதில்லை.

    இந்த மூதாதை இனம் ஒரு புறம் குரங்குகளாகவும் ஒரு புறம் மனிதர்களாகவும் ஆன காலம் சுமார் 100000 - 200000 வருடங்கள். இதை நாம் fossils மூலம் அறிகிறோம். அது மட்டுமல்ல, அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளை மரபணுக்களை ஒப்பிடுவதன் மூலமும் அறிகிறோம்.

    குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மூதாதையர்கள் ஒரே இனம். ஒரே மனித குலம் சற்றே 10000 வருடங்களில், சீனர்கள் ஒரு மாதிரியாகவும், எஸ்கிமோக்கள் ஒரு மாதிரியாகவும், ஆப்பிரிக்கர்கள் ஒருமாதிரியாகவும் ஆகியிருப்பதை பார்க்கிறோம். இவை அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்கிறது.


    அடுத்த கேள்வி
    பரிணாமம் நின்றுபோய் விடவில்லை. அது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. மேலே உதாரணம் சொன்னது போல எஸ்கிமோக்கள் ஒருமாதிரியாகவும், ஆப்பிரிக்கர்கள் வேறு ஒரு மாதிரியாகவும் இருப்பதை பார்க்கிறோம் அல்லவா. அது பரிணாமத்தின் வேலைதான்.

    ReplyDelete
  32. சகோதரர் இப்னு பஷீர் அவர்களது கேள்விகளுக்கு பதில்கள்

    //பரிணாம கோட்பாடு என்பதே இன்றுவரை இதுபோன்ற 'இருக்கலாம்'களின் அடிப்படையில் கட்டப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகையாகத்தான் இருக்கிறது. //
    http://www.harunyahya.com/nas09.php

    தவறான செய்திகளையும் தவறான தகவல் தரும் இது போன்ற பிரச்சாரர்களை நம்பாதீர்கள். ஹாரூன் யாஹ்யாவின் பொய்களை பலரும் இணையத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ஹாருன் யாஹ்யா போலவே அடிப்படை வாத கிரிஸ்துவர்களும் இது போன்று பல தளங்களை ஏற்படுத்தி பொய்களை எழுதி வைத்துகொண்டிருக்கிறார்கள்.

    இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் எழுதுவது "இல்லாமலும் போகலாம்" என்பதனை உள்ளடக்கியது என்பது உண்மைதான்.

    ஆனால், "இப்படித்தான் நடந்தது" என்று ஆணித்தரமாக ஒருவர் கூறுவதாலேயே அது உண்மையாகியும் விடாது. உலகம் ஒரு உருண்டை என்று கண்டுபிடிப்பதற்கு முன்னால் உலகம் ஒரு தட்டையானது என்றுதான் எல்லோரும் நம்பி வந்தார்கள். ஆணித்தரமாக அடித்துக்கூறினார்கள். அதனால், உலகம் தட்டையாக ஆகிவிடவில்லை. அது உருண்டையாகத்தான் இருந்தது.

    ஆனால், ஒரு அறிவியல் பக்கத்தில் எங்கே "இருக்கலாம்" என்று எழுதியிருக்கிறார்கள் என்று தேடிக்கண்டுபிடித்து அதனை வைத்து "இது ஹேஷ்யம்" என்று கூறுவது சரியல்ல.

    பரிணாமம் ஒரு அறிவியல் என்பதாலேயே இன்று ஜெனடிக் மருத்துவமும், பல்வேறு வகை மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கான்ஸர் என்பதன் காரணத்தை அறிய உதவுவதே பரிணாம அறிவியல்தான்.

    பரிணாம அறிவியலின் உண்மையால்தான், எலிக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும் ஒரு மருந்தை மனிதன் உட்கொண்டு நோய் தீர்க்க முடிகிறது. பரிணாம அறிவியலின் உண்மையால்தான் ஒரு ஆட்டையும் மாட்டையும் குலோன் செய்ய முடிகிறது. மனிதனை குலோன் செய்ய ஆராய்ச்சியும் நடத்த முடிகிறது.

    பரிணாம அறிவியல் இல்லையென்றால், நாம் உபயோகிக்கும் பல்வேறு மருந்துகள், பிறப்பு குறைபாடுகளுக்கு மருந்துகள், பிறப்பு குறைபாடுகள் ஏன் வருகின்றன என்பதற்கு விளக்கங்கள் எதுவும் இல்லை.

    ReplyDelete
  33. இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது
    :-))

    ReplyDelete